திங்கள், 25 நவம்பர், 2013

தாவி குதிக்கும் தலைவர்கள்!!


நிலைபோல் வாழ்க்கை இருக்குமென்றே
    நிமிர்ந்த நெஞ்சாய் வலம்வருவர்!
விலைபோல் ஏறி இறங்காமல்
    விதியை வெல்வோம் எனநினைப்பர்!
அலைபோல் ஆட்சி வந்துபோயும்
    ஆளும் வழக்கை மாற்றமாட்டார்!
இலைபோல் மரத்தில் தலையசைக்கும்
    இனமாய் நம்மை எண்ணிடுவார்!

மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!


அருணா செல்வம்.

25 கருத்துகள்:

  1. வணக்கம்
    அருமையான கவிதை தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. ம்ஹூம்... கேக்கிறதுக்கு யாருக்கு துணிவு இருக்கு? த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியாவது சொல்லி மனத்தைத் தேற்றிக் கொள்ளலாமேன்னு தான்....

      நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  3. நிலையற்ற ஒன்றை நிலையானதாக நினைக்கும் மனித பலவீனம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய முடியும்?
      “நம்பிக்கை“ என்ற ஒன்றை வைத்துப் பலவீனத்தை மூடிவிடுகிறோம் அல்லவா?

      கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நீங்கள் எழுதிய கவிதையை இந்த கால தமிழில் விளக்கம் சொல்லி விட்டு பரிசை வாங்கி செல்லுங்கள் கவிஞரே... tha.ma 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் காலம் என்றால் என்ன?

      இந்தக் கவிதையை எழுதி கிட்டத்தட்ட நான்கு வருடம் ஆகிவிட்டது. இதே கவிதையை நான் ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
      இன்று அதை மாற்றிச் சொல்ல மாறுபாடு எதுவும் நடக்கவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  5. அருமை... உண்மை...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  6. ஒற்றுமை இன்றித்தான் உருக்குலைகிறோம் நாமிங்கே...

    உணர்த்திய உண்மை அருமை!

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டில் மக்களாட்சி தானே நடக்கிறது...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  9. சகோதரிக்கு வணக்கம்
    அற்புதமான ஒற்றுமையை வழியுறுத்தும் வரிகள். அழகான நயத்தோடு உ(ரை)ரக்க தந்தமை சிறப்பு சகோதரி. பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  11. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  12. \\ உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
    தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!//

    அந்த நாளும் வந்திடாதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  13. "உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
    தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!" என்ற
    அடிகளை அடியேன் விரும்புகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜீவலிங்கம் ஐயா.

      நீக்கு