வியாழன், 3 அக்டோபர், 2013

இயலாமையால் வரும் வார்த்தை! (படித்தது)





     ஒரு சமயம் அறிஞர் அண்ணா தன் நண்பர்களுடன் காரில் திருச்சியிலிருந்து ஈரோட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

    வழியில் ஓர் ஊரில் நடந்த மாற்றுக் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில், ஒரு பேச்சாளர் அறிஞர் அண்ணாவை மிகவும் தரக்குறைவாக ஏசிக்கொண்டிருந்தார்.

    அதைக் காரில் சென்று கொண்டிருந்த அறிஞர் அண்ணாவும் அவரது நண்பர்களும் கேட்டனர்.

    அதைக் கண்டும் காணாதது போல் இருந்த அண்ணாவைப் பார்த்து ஒரு நண்பர், “அவர் ஏன் உங்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசுகிறார்? நீங்கள் யாரையும் எதுவும் சொல்வதில்லையே!“ என்று கேட்டார்.

   அதைக் கேட்டும் அறிஞர் அண்ணா எதுவும் பேசாமல் புன்முறுவல் பூத்தார். நண்பர் பேசாமல் இருந்துவிட்டார்.

   சற்று நேரத்தில் எதிரில் ஒரு மாட்டு வண்டி வந்தது.

   கார் சென்று கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த வண்டிக்காரன், டேய்! மெல்லப் போங்கடா!“ என்று கூறியபடி சென்றான்.

   அப்பொழுது அறிஞர் அண்ணா தன் நண்பர்களைப் பார்த்து, “பார்த்தீர்களா... நாம் ஒன்றுமே செய்யவில்லை. ஆனாலும் நம்மைத் திட்டுகிறான். காரணம்.... நம் ஓட்டத்திற்கு அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த இயலாமையினால் அவன் திட்டுகிறான். அந்த அரசியல்வாதியும் இதே ரகம்தான்“ என்று பதிலளித்தார்.

   இந்த விளக்கமான பதிலைக் கேட்டதும் நண்பரின் மனம் சமாதானமடைந்தது.



(படித்ததில் பிடித்தது)

அருணா செல்வம்.

20 கருத்துகள்:

  1. அண்ணா மாதிரி அறிவாளி புத்திசாலி இவ்வுலகில் யாரும் இது வரை பிறக்கவில்லை; நம்ம மகாத்மா காந்திக்கு அண்ணா மாதிரி அறிவு இருந்திருந்தால் நம் நாடு நன்றாக முன்னேறியிருக்கும். எப்படி?

    ஒரு உதாரணம்:
    மதுரைக்கு வந்த காந்தி...கோமணம் மட்டும் கட்டிய விவாசயியைப் பார்த்து, அவர்கள் முழுத் துணி போடும் வரையில் நானும் முழுத் துணி போட மாட்டேன் என்றார்....உண்மையான தலைவன் என்றால், அவர்களுக்கும் [ஏழைகளுக்கும்} முழுத் துணி வாங்கித் தருவேன் என்று சொல்லியிருப்பார்.

    காந்தி மாதிரி சிந்திக்காமல், அண்ணா, ".அரிசி இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் போது, அரசி மலிவு விலையில் போடுவேன்" என்று சொன்னார்.

    இதே காந்தியாக இருந்தால், "ஏழைகள் அரசி சோறு சாப்பிடும் வரை நானும் அரிசி சோறு சாப்பிட மாட்டேன்" என்று சொல்லியிருப்பார்.

    இவர்கள் இருவரில், யார் ஏழைப் பங்காளன்? யார் தலைவன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      காந்தியைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.
      நல்லது.
      உண்மையில் காந்தி அறிஞர் அண்ணா மாதிரி இல்லை தான்!
      நீங்கள் சொன்னது போல் காந்தியின் இடத்தில் அண்ணாவோ அல்லது நாமோ, அல்லது வேறு ஒருவர், யாராக இருந்தாலும் நீங்கள் யோசித்தது போல, சொல்லியது போல தான் சொல்லுவோம். யோசிப்போம். செய்வோம்.

      ஆனால் காந்திஜியின் எண்ணங்கள் வேறு.
      அவர் கத்தி இன்றி யுத்தம் இன்றி அமைதி வழியில் போராட வேண்டும் என்பதை மட்டுமே விரும்பினார். அப்படித்தான் போராடி வாழ்ந்தார்.
      அதனால் தான் நாம் எல்லோருமே சாதாரண ஆத்மாக்களாக இருக்கிறோம்.
      அவர் மகாத்மாவாகப் போற்றப் படுகிறார்.

      இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள்
      யார் ஏழைப் பங்காளன்?
      யார் தலைவன்?

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
    2. நான் அண்ணா என்று எழுதினது ஒரு கிண்டல்! காந்தி செய்தது தவறு என்பதற்காக அண்ணாவுடன் ஒப்பீடு செய்தேன். அண்ணா ஆட்சியைப் பிடிக்க சொன்ன சொல். மூன்று படி அரிசி. இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் அரிசியே காணமல் போய்விட்டதாக சொல்வார்கள். காந்தி உயிருடன் இருந்தால் ஏழை மக்களுக்கு அரசி கிடைக்கும் வரை நான் அரிசி சாப்பிடமாட்டேன் என்று சொல்லியிருப்பார். ஒரு நல்ல [leader] தலைவனுக்கு இது அழகல்ல!

      அகிம்சை மூலம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றால், உலகத்தில் உள்ள மீதி நாடுகளுக்கு எப்படி இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. 90 விழுக்காடு நாடுகள் அவர்கள் கையில் (அமேரிக்கா கனடா உள்பட).

      இந்தியாவிற்கு சுதந்தரம் கிடைப்பதற்கு வருடங்களுக்கு முன்பே நம் ஆட்கள் தேர்தலில் நின்றார்கள். ஆண்டார்கள்.
      பரவலாக நீதிக்கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது 1917ம் ஆண்டு டாக்டர் டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. இவர்கள் ஆட்சி செய்தும் இருக்கிறார்கள்.

      ராஜாஜியும் 1937-1939 ஆண்டார். உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தா மாதிரி இந்தியாவிர்க்கும் கிடைத்தது இருக்கும். எல்லா நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது காலத்தின் கட்டாயம். உண்மை அப்படியிருக்க..காந்தி பெயரை வைத்து மற்றவர்கள் பிழைத்தார்கள்.

      http://ta.wikipedia.org/wiki/நீதிக்கட்சி

      நீக்கு
    3. ஒரு நாடு அடிமையாக, அவர்களின் அட்டுழியங்களைக் கண்டு கொதித்தாலும் அவர்களை எதிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்த காலம் அது.
      அந்தக் காலக்கட்டத்தில் அவரின் செயல் சரியானதாகத்தான் மக்களுக்குப் பட்டிருக்கிறது. அதனால் தான் இன்று வரையில் அவரைப் புகழ்கிறார்கள்.

      “சுதந்திரம் கிடைத்தது காலத்தின் கட்டாயம்“ - ஹா ஹா ஹா

      இதைக் கேட்டால் அன்று சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு உயிர் இழந்த பகத்சிங், கொடிகாத்த குமரன் போன்றோர்கள்
      “நம்பள்கி போன்றவர்கள் சுதந்திர இந்தியாவில் பிறந்ததால் சுதந்திரம் வாங்கியதின் வலி அறியாமல் பேசுகிறார்கள்“ என்று சொல்வார்கள்.

      நம்பள்கி... கடைசியாக ஒன்று சொல்லி முடிக்கிறேன்.

      இன்றைய சில அரசியல்வாதிகள் நடிப்புச் சம்மந்தப்பட்டத் துறையிலிருந்து வந்ததால் அவர்கள் நாடகம் நடத்த, நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
      இவர்களை விட தன்னலம் கருதாமல் மற்றவர்களின் கவலையில் தானும் பங்குகொண்டு அதன் அவஸ்த்தையை அறிந்து வாழ்ந்த மனிதர்களைப் நாம் போற்றமல் இருந்தாலும் பரவாயில்லை. இகழாமல் இருக்கப் பழகுவோம்.

      நன்றி நம்பள்கி.


      நீக்கு
    4. உங்கள் எண்ணங்களை மதிக்கிறேன்! நம் நாட்டில் உயிர் இழந்தவர்கள் தியாகத்தையும் மதிக்கிறேன். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை பற்றி குறை சொல்லவில்லை. எத்தனை பேர் உயிர் இழந்தாலும்; வெள்ளைக்காரன் வெளியேறி இருக்கமாட்டன். அது அவன் புத்தி

      நான் சொல்லவந்தது...வெள்ளைக்கரன் தானே வெளியேற நினைக்காமல் இருந்தால் சுதந்திரம் கிடைத்து இருக்காது. ஆளை விட்டா போதும் என்று இங்கிருந்து ஓடினான்; இது தான் உண்மை.

      அமேரிக்கா சண்டை போட்டு தான் வாங்கியது. எவ்வளவு உயிர் பொருள் சேதம். அந்த அந்த கால கட்டங்களில் ஏன் இந்தியாவிற்கு அவனாகவே சுதந்திரம் கொடுக்கவில்லை?

      1997 - ஹாங்காங்குக்கு சுதந்திரம் ஏன் கொடுத்தார்கள் (ஹாங்காங் சுதந்திரம் வேண்டாம் என்று சொல்லியும்).

      சரி! இந்தியாவிற்கு காந்தி மூலம் சுதந்திரம் கிடைத்தது என்றால்...மீதி உள்ள உலக நாடுகளுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தி-கள் யார்? யார்?

      இந்த இடுகையைப் பாருங்கள் நேரம் இருப்பின்.
      http://www.nambalki.com/2013/10/blog-post_3572.html

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. உயர்ந்த மனிதன்...
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  4. அரசியலைப்பற்றிய புரிதல் நன்கு விளங்கியது.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி! அறிஞர் அண்ணாவைப் பற்றி எல்லாருமே மறந்துவிட்டபோது நீங்களாவது நினைவு வைத்திருக்கிறீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.
      மறக்கக்கூடியவரா அறிஞர் அண்ணா.!?
      அரசியல் என்பதை விடு்த்து அவரின் அறிவார்ந்த எண்ணங்களையும் வார்த்தைகளையும் படிப்பது எனக்கு அலாதியான பிரியம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி செல்லப்பா ஐயா.

      நீக்கு
  6. படித்ததில் பிடித்தது - பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  7. திறமையானவர்களை மதிப்பதில் என்றும் தவறில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. அண்ணாவின் பிறந்தநாளில் வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்....நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு புத்தகத்தில் இதைப் படித்தேன்.
      பிடித்திருந்தது. அதனால் உடனே வலையில் பதித்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மீண்டும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. நீங்கள் படித்ததில் பிடித்ததை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு