திங்கள், 11 பிப்ரவரி, 2013

கதையாய்ப் படித்தால் போதாது!!





எல்லை இல்லா இலக்கியத்தில்
    இருக்கும் கதையோ அகத்துறைதான்!
இல்லக் கிழத்தி! புறக்கிழத்தி!
    எழிலாய் அகத்தில் ஒருத்தியாம்!
கொள்ளை இன்பம் கொடுப்பதுவே
    கொண்ட மனத்தில் உள்ளவளாம்!
தில்லைக் கூத்தன் பெருமானும்
    பெண்ணைத் தன்னுள் வைத்தானாம்!

எட்டுத் தொகையும் பாப்பத்தும்
    எடுத்தே ஓதும் இன்பங்கள்!
கட்டுக் கடங்கா மனத்தினைநீ
    கட்டுக் கோப்பில் வைக்காது!
எட்டுத் திக்கும் பறக்கவிட்டால்
    இன்பம் இருக்கும்! அதுபெரிய
கொட்டும் முரசாய்ச் சிரசினிலே
    கொட்டித் தாழ வைத்துவிடும்.!

அன்றே சொன்னான் இராவணனின்
    அழிவு பெண்ணால் வருமென்றே!
இன்று பெண்கள் சொல்லுகிறோம்
    இனிக்க ஒருத்தி போதுமென்றே!
என்றும் பெண்ணால் அழிவில்லை
    ஏங்கும் மனத்தை அடக்குவதால்
நன்றாய் மனிதன் வாழ்ந்திடலாம்
    நாளும் வாழ்வில் உயர்ந்திடலாம்!

கம்பன் காட்டும் காவியத்தைக்
    கதையாய்ப் படித்தால் போதாது!
வம்போ எதனால் வந்ததென்று
    வகையை நன்றாய்ப் புரிந்துகொண்டு
நம்பி மனத்தில் பதியவைத்து
    நல்ல வழியில் நடந்துவந்தால்
தெம்பும் இருக்கும்! தெளிவிருக்கும்!
    தெங்வம் அங்கே துணையிருக்கும்!


(தொடரும்)
அருணா செல்வம்.

23 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.
      மாற்றி விடுகிறேன்.

      நீக்கு
  2. உண்மையில் கம்பன் வரிகளில் வாழ்க்கைக்கான தெம்பம் தெளிவும் இருப்பது உண்மை தான் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நட்பே.

      நீக்கு
  4. அன்புத்தோழி...

    ஒருத்தனுக்கு ஒருத்தியென்று
    ஓங்கி உரைத்ததினை
    இருத்தி மனதில்வைத்தால்
    இருக்கும் இன்பம் என்றீர்
    பொருத்தமான உவமைகண்டு
    பொருந்த உரைத்தாய்தோழி
    விருத்தமாய் விரும்பியாவரும்
    விரைந்து கொண்டால் மேன்மை!

    அருமையாக உள்ளது தோழி உங்கள் கவி!
    சிறந்த உவமானங்களுடன் படைத்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்!!!

    ஆர்வத்தினால் நானும் ஏதோ கிறுக்குகின்றேன். தரமில்லையாயின் தவிர்த்திடுங்கள். குறையில்லை. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புத் தோழி....

      தங்களின் வருகையும் அழகிய கவிதையால்
      கொடுத்த வாழ்த்தும் இனிக்கிறது.

      கவிதைக்கு முக்கியம்
      கருத்துத் தான்.
      மரபெல்லாம் பிறகு தான்...
      தொடர்ந்து எழுதுங்கள் தோழி்

      நன்றி.

      நீக்கு
  5. கம்பன் காட்டிய வம்பினிலே
    கருத்தை உண்டு களித்தீரோ
    நன்றாய் உணர முடிகிறதே
    நவிலும் உங்கள் வார்த்தையிலே
    சிந்தை மாறி மெய்யழித்து
    சிதறும் மானிட திசையுணர
    சொல்லர்க்கரிய கவி தந்தீர்
    மெல்லக் கனிந்ததென் மனது !

    வாழ்த்துக்கள் அழகிய கவிதையை ஆக்கி எம்மை அகமகிழ வைத்ததர்க்காய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பன் கொடுத்த விருத்தத்தில்
      கருத்துப் பிழையைக் கண்டீரோ?
      வம்பன் என்றே உரைத்திட்டீர்
      வார்த்தை சாலம் கொண்டீரோ?
      கம்பன் கவிக்கு நிகராக
      கன்னித் தமிழில் விருந்திட்ட
      கொம்பன் இருந்தால் சொல்வீரே
      குனிந்து அவரைக் கும்பிடுவேன்!!

      வாழ்த்திற்கு மிக்க நன்றி நட்பே.

      நீக்கு
  6. நல்ல வழியில் நடந்துவந்தால்
    தெம்பும் இருக்கும்! தெளிவிருக்கும்!// அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  7. // என்றும் பெண்ணால் அழிவில்லை
    ஏங்கும் மனத்தை அடக்குவதால்//
    நன்றாய் சொன்னீர்கள்
    சந்தக் கவிதை சிந்தை கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  8. கம்பன் காட்டும் காவியத்தைக்
    கதையாய்ப் படித்தால் போதாது!

    வாழ்வியல் தத்துவத்தை அருமையாய்
    கவிதையாய் தந்தமைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  9. ஒருவனுக்கு ஓருத்தி என்பதை மனதில் இருத்தி வாழ்தல் குறித்த கவிதை நன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. அழகிய வாழ்வியல் கவிதை...தொடருங்கள் அருணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரெவெரி சார்.

      நீக்கு
  11. இலக்கியத்தையே கவியாக்கி எடுத்துரைத்தமை நன்று.

    பதிலளிநீக்கு