வியாழன், 13 டிசம்பர், 2012

உங்களால் முடியும்! என்னால் முடியாது!! (நசைச்சுவை)





நட்புறவுகளுக்கு வணக்கம்.

      என் ஆசிரியர் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எங்களின் உரையாடல் பொதுவாகத் தமிழில் இலக்கியத்தைப் பற்றியோ அல்லது கவிதை இலக்கணத்தைப் பற்றியோ தான் இருக்கும்.
     நேற்று திருக்குறளைப் பற்றிப் பேசினோம். திருவள்ளுவர் எவ்வளவு சிறிய பாடலில் பெரிய கருத்துக்களைப் புகுத்தியுள்ளார் என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, “கவிதை என்பது கருத்துக்களைச் சுறுக்கிச் சொல்லுவது தான் முறை. கவிதையிலேயே விரிவாகச் சொல்லவேண்டும் என்றால் பேசாமல் உரைநடையாகவே எழுதிவிடலாம்.“ என்று சொன்னார்.
    பிறகு அவரே, “நீங்கள் கூட இப்பொழுதெல்லாம் வலையில் அதிகம் உரைநடை தான் எழுதுகிறீர்கள். சொல்ல வந்த கருத்தைக் கவிதையில் சொல்லலாம் இல்லையா..?“ என்றார்.
    நானும் “நீங்கள் பெரிய கவிஞர். எந்தக் கருத்தையும் கவிதையில் சொல்லத் தெரிந்தவர். நீங்கள் எழுதுங்கள். நான் உரைநடையிலேயே எழுதுகிறேன்“ என்றேன்.
    “நான் எழுதினால் அவ்வளவாக யாரும் படிப்பதில்லை. நீங்கள் எழுதினால் நிறைய பேர் உங்கள் வலையில் படிக்கிறார்கள்.“ என்றார். குரலில் சற்று வருத்தம் தெரிந்தது.
    நான் சொன்னேன், “கவிஞரே... நீங்கள் நீண்ட கவிதைகளாக இடுகிறீர்கள். நானும் பெரிய இடுகைகள் போட்டால் யாரும் படிப்பதில்லை என்று தான் கதைகளைச் சுறுக்கிக் குட்டிக்கதைகளாக வெளியிடுகிறேன். இப்பொழுது நிறையப்பேர் படிக்கிறார்கள். அதனால் நீங்களும் இனிமேல் கவிதைகளைக் குட்டி குட்டியாகப் போடுங்கள்.“ என்றேன்.
    உடனே அவர், “அதெல்லாம் என்னால் முடியாது.“ என்றார்.
    நானும் “என்னால் கதைகளைச் சுறுக்கிக் குட்டிக் கதைகளாகப் போடமுடிகிறது... உங்களால் கவிதைகளைச் சுறுக்கி ஏன் குட்டிக்குட்டியாகப் போட முடியாது...?“ என்று கேட்டேன்.
   அவர் திரும்பவும் “நீங்கள் போடலாம். நான் போட முடியாது தான்.“ என்று அழுத்தமாகச் சொன்னார்.
   எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் குழப்பத்துடன் சற்று நேரம் பேசாமல் இருந்தேன். அவர் என்ன நினைத்தாரோ... “என்ன யோசிக்கிறீங்களா...? யோசித்துக் கண்டுபிடியுங்கள். பிறகு பேசலாம்“ என்று தொலைபேசியின் இணைப்பைத் துண்டித்து விட்டார்.
   நானும் சற்று நேரம் யோசித்து யோசித்துப் பதில் தெரியாமல் போனதால் இன்றே கேட்டு விட வேண்டும் என்ற ஆவலுடன் தொலைபேசியில் கவிஞரை அழைத்தேன்.
   போனை எடுத்த அவர் மனைவியிடம், “என்னம்மா... உங்களின் கணவர் வழக்கம் போல் என்னைக் குழப்பிவிட்டு போனை வைத்துவிட்டார்“ என்றேன்.
   “அப்படியா... இன்னைக்கு என்ன குழப்பம் அருணா...?“ என்றார் ஆவலாக அவர் மனைவி. நானும் விசயத்தைச் சொன்னேன். அவரும் சற்று குழம்பிவிட்டு “அப்படியா சொன்னார்? ஏன் அப்படி சொன்னார்... சரி. அவரிடமே கேட்டுக்கொள்“ என்று சொல்லிக்கொண்டே கவிஞரிடம் போனைக் கொடுத்தார்.
   என் குரலைக் கேட்டதும் “என்ன அருணா.. பதில் தெரிந்ததா...?என்றார் சிரித்தபடி கவிஞர்.
    நானும் “நீங்கள் பெரிய கவிஞர். அதனால் பெரியப்பெரியக் கவிதைகளாக போட்டால் தான் மதிப்பு என்று சொல்கிறீர்களா...? “ என்று நான் கண்டுபிடித்ததைச்(?) சொன்னேன்.
   “பெரியதாகப் போடுவதைப்பற்றி இங்கே பேச்சி இல்லை. குட்டியாகப் போடுவதைப் பற்றி தான் பேச்சி“ என்று என்னை மேலும் குழப்பினார்.
   இதற்கு மேல் நம்மால் குழம்ப முடியாது என்று நினைத்து “சரிங்க. ஏன் உங்களால் முடியாது என்பதை மட்டும் சொல்லிடுங்கள். என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.“ என்று உண்மையை ஒப்புக்கொண்டேன்.
   “நீங்கள் ஒரு பெண். உங்களால் முடியும். ஆனால் நான் ஆண். என்னால் குட்டியெல்லாம் போட முடியாது “ என்றார் சிரித்தபடி.
   அதற்கு மேல் பேச என்னிடம் என்ன இருக்கிறது?
   பேச வார்த்தை யின்றிச் சிரித்தபடித் தொலைபேசியை வைத்தேன்.

நட்புடன்
திருமதி அருணா செல்வம்.

38 கருத்துகள்:

  1. அருமை... நீங்கள் ஒரு பெண் என்பதை மிகவும் அழகாக உரைநடையில் தெரியப்படுத்திருக்கிறீர்கள்... நீங்கள் ஒரு பெண்ணாகத்தான் இருப்பீர்கள் என்று நான் முன்பே கணித்திருந்தேன் (இப்ப சொல்றான் பார் என்கிறீர்களா) அது உண்மையாகிவிட்டது.... நன்றி சகோதரி....

    பதிலளிநீக்கு
  2. கவிஞருக்கு உள்ள நயத்தோடு அவரும் சொல்லியிருக்கிறார்.

    வலையுலகப் பார்வையாளர்களை நன்கு உணர்ந்திருக்கிறீர்கள்.

    இங்கு யாருக்கும் நேரமில்லை..

    பார்வையாளர்களை வலையில் தங்கவைப்பது என்பது பெரிய கலை.

    அதன் முதல் படிநிலை சிறிய பதிவாக வெளியிடுவது.

    அதனை சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  3. நல்ல நகைச்சுவை குணமுள்ளவராக இருக்கிறாரே கவிஞர்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஆத்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆத்மா.

      நீக்கு
  4. ஹ்ம்ம்... நானும் யோசித்தேன் ஆனால் இறுதியில் அவர் சொல்வதை கண்டவுடன் சிரிப்பு வந்தது. இப்பொழுது சுருக்கமாக உள்ள கவிதைகளை வரிகளை தான் பலர் விரும்புகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வது உண்மை தான் ஆயிஷா பருக்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. முதலில் நீங்கள் ஆண் என்றுதான் நினைத்திருந்தேன். நீங்கள் பெண் என்ற சந்தேகம் ஒரு சில பதிவுகளின்போது ஏற்பட்டது உண்டு.ஒரு பதிவில் உங்களையும் அறியாமல் அது வெளிப்பட்டது என்றும் நினைக்கிறேன்.
    எப்படி இருப்பினும் எங்களுக்கு தேவை நல்ல படைப்புகளே!வாழ்த்துக்கள்.

    உங்கள் குருநாதர் பாரதிதசன் ஓர் அற்புதக் கவிஞர் அவரது வலைப்பதிவை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் நீங்கள்
      நினைத்ததை வெளிப்படையாகச்
      சொன்னதிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  6. நல்ல நகைச்சுவை ... நான் பாதிபடிக்கும் போதே புரிந்து கொண்டு விட்டேன் ... முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று.

    பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சீனியர். அதனால் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடுகிறீர்கள்...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  7. நீங்கள் குட்டிக் கதை ராணி என்றால் உங்கள் ஆசிரியர் கடி விட்டு பேர்வழியாக இருப்பார் போல் இருக்கிறதே !!!

    அட நான் தாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ?????????????

      அனோகமாக எனக்கு நீங்கள் தான் “கடி விட்டு பேர்வழி“ போல் தெரிகிறீர்கள்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. கவிஞ்ஞர் கி.பாரதிதாசன் ஐயா அவர்கள் சிலடையாக குறிப்பிட்டு நீங்கள் பெண் என்பதை உணத்திவிட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. நகைச்சுவை சொல்லப்போய் உங்களையே சொல்லிவிட்டீர்கள் அருணா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...
      சொல்ல வேண்டிய அவசியமும் இருந்தது... அதனால் தான்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. கதையா...?
      உண்மை நிகழ்வு சீனி ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. எப்போதும் போல்தான் உங்கள் பதிவைப் படிக்கிறேன் செய்தி என்ன என்பதில்தான் எல்லாம் உள்ளது .என்ன ஆண்,பெண் பார்வையில் மாற்றம் இருக்கலாம். இப்போதெல்லாம் இருவருமே ஒரே மாதிரி சிந்திக்கவும் ஆரம்பித்துள்ளனர். என்ன ஒன்று பெரும்பாலும் பெயர் வைத்து நண்பரே என்றுவிடுவேன் என் கற்பனையில் என்னைவிட வயது குறைந்தோரென்றால் பெயர் சொல்லி விடுவதால் எனக்கு உங்களை விளிப்பதில் பிரச்சனை வரவில்லை அருணா செல்வம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழி... நீங்களும் மற்றவர்களும் என்னை அருணா என்று அழைப்பதையே விரும்புகிறேன்.

      தவிர நான் இந்தப் பதிவிற்கு இட்டப் படத்தைப் பற்றி யாருமே எதுவுமே சொல்லாதது கொஞ்சம் வருத்தம் தான். யாருமே அந்தப் படத்தை உற்று நோக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      நீங்களாவது உற்றுப் பார்த்து அதில் இருக்கு குட்டி குழந்தையின் அழகை ரசியுங்கள்.

      நன்றி.

      நீக்கு
  12. கவிஞர் என்ன அழகாக உணர்த்தி விட்டார். சகோதரி என் கேள்விக்கான விடை கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சசிகலா.
      (எனக்கு உங்களை ஏமாற்றப் பிடிக்கவில்லை.)
      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  13. சற்றே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதிவு. இனி தொடர்ந்து வருகிறேன். நேரமின்மையால் தான் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... பரவாயில்லை பாரதி.
      இப்பொழுது வந்த வருகைக்கும் தந்த கருத்திற்கும்
      மிக்க நன்றி பாரதி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  15. அப்பாடா....ஒருவழியா கண்டுபிடிச்சிட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டுபிடித்து விட்டீர்களா...?
      வாழ்த்துக்கள் அகிலா மேடம்.
      நன்றி.

      நீக்கு
  16. என் பதிவினில் தங்களுக்காக சூடான சுவையான அடை காத்திருக்கிறது. சாப்பிட வாருங்கள், மேடம்.

    http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தவிட்டேன் ஐயா.
      செய்து சாப்பிட தான் நேரம் ஒதுக்கனும்.

      நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  17. கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் குழந்தையை ரசிக்கமுடிந்தது அருணா. அதுக்கெல்லாம் போட்டோகிராபிக் கண் வேணுமோ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டோ கிராபிக் கண் வேண்டுமோ என்று தெரியவில்லை.

      ஆனால் நான் பதிவை எழுதிவிட்ட பிறகு படத்திற்காக
      இணையத்தில் தேடியபோது இந்த படம் கண்ணில் மாட்டியது.
      அதே சமயம் நம் பதிவிற்கும் பொருத்தமாக இருப்பது போல் இருந்ததால் பொட்டுவிட்டேன்.
      ஆனால்... நான் அதை ஒரு வரியிலாவது சொல்லியிருக்கனும்.
      என் தவறு தான்.
      நன்றி தோழி.

      நீக்கு
  18. மிக நன்றாக சமாளித்து விட்டீர்கள் அருணா!
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அம்மா.

      நீக்கு