செவ்வாய், 27 மார்ச், 2012

அவள் பார்வை! (கவிதை)




தாமரை முகத்தாள்
தாம் அரைக் கண்ணால்
நோக்கியதும்
என்நெஞ்சைத் தாக்கியதே!


பெண்ணின் கண்களை
வண்டென்பார்! வண்ண
மலரென்பார்! பாயும்
அம்பென்பார்! விண்
மீனென்பார்! துள்ளும்
கயலென்பார் கவிஞர்கள்!

கண்ணே.. உன்
கண்களைக் கண்ட நானோ
குருடாகி  மதிமயங்கி
உளருகிறேன்.

உன் கண்கள்
வண்ணம் தீட்டாத
வரைபடம்!
உன் புருவம்
வண்ணமில்லாத
வானவில் தான்!
இமையென்ன மழைக்கால
மயில்தோகையோ..

அந்தக் கருவிழி பார்வையில்
காந்தம் தான் உள்ளதோ?
என் இரும்பு மனமும்
சட்டென்று அப்பார்வையில்
ஒட்டிக்கொண்டதே!

அது கண்களா?
கலைக்கூடமா?
கண்டதும் கவிப்பாட
துர்ண்டுகிறதே!

கண்ணே.. அந்தக்
கனநேரப் பார்வையில்
கனம் நிறைந்து போனேன்.
மனம் நிறைந்து வாழ்வதற்கு
திரும்பவும் நீ ஒரேயொரு
கனநேரம் பார்த்து விடேன்!

11 கருத்துகள்:

  1. கண்களும் கவி பாடுதோ ? இல்லை இல்லை இங்கு வார்த்தைகள் விழி தேடி அருமை .

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கு மிக்க
    நன்றி சசிகலா.

    பதிலளிநீக்கு
  3. பெண்மையின்
    கடைக்கண் பார்வைக்கு
    ஆயிரம் கவி எழுதினாலும்
    நீண்டுகொண்டேபோகும் கவிதைகள்

    கவிஞர்களே
    சொக்கி விழும்போது
    பாவம் காதலன்
    பித்தானாகி போவான்

    கவிதையும் உங்கள் தமிழும் அழகோ அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பித்தாகிப் போய்விட்டேன்
      என்று தான் நினைக்கிறேன் செய்தாலி அவர்களே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  4. கவிதையுடன் சிலேடையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு
      மிக்க நன்றிங்க அப்பாதுரை.

      நீக்கு
  5. விருந்தும் மருந்து உன் கண்ணல்லவா
    என கண்ணதாசன் வரிகளை நினைவுறுத்திப் போகும்
    அருமையான கவிதை
    பார்வையை எடுக்கும் அந்த ஓரவிழிப்பார்வையே
    மீண்டும் பார்வை கொடுக்கும் என்ற கற்பனை
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும்
      அழகிய பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  6. அரைக் கண் பார்வையின்
    அசைவால் மாமலையே அசையுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க சத்ரியன்.

      உங்கள் வருகைக்கும் பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றிங்க.

      நீக்கு
  7. அழகான கவிதை... கவிதையும் கவி பாடுகிறது...

    பதிலளிநீக்கு